Categories
மாநில செய்திகள்

நடிகர் விவேக் மருத்துவமனையில் கவலைக்கிடம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

நடிகர் விவேக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் பல வருடங்களாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சின்ன கலைவாணர் விவேக். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று காலை 11 மணியளவில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரின் குடும்பத்தினர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையினால் அவர் நினைவு திரும்பினார். அதன் பின்பு கரோனரி ஆஞ்ஜியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை  செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது தீவிர சிகிச்சை அறையில் எக்மோ கருவியின் உதவியுடன் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். மேலும் இது cardiogenic அதிர்ச்சியுடன் கூடிய கடும் coronary syndrome. ஆனால் இது தனிப்பட்ட ஒரு நிகழ்வு தான் என்றும் கொரனோவிற்கு எதிரான தடுப்பூசியினால் இது நிகழவில்லை என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |