Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் 46-வது படத்தின் டைட்டில்…. வெளியான புது அப்டேட்…..!!!!

நடிகர் விஜய்சேதுபதி 2010ம் வருடம் வெளியாகிய “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்து இருக்கிறார். இதையடுத்து பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இப்போது விஜய்சேதுபதியின் 46-வது படத்தினை டிரைக்டர் பொன் ராம் இயக்கி வருகிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தெரிகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்சேதுபதி மீண்டுமாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு இன்று இரவு 7:40 மணிக்கு வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |