விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள முகிழ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான அனபெல் சேதுபதி, லாபம், துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், VJS 46, மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி தனது மகள் ஸ்ரீஜாவுடன் இணைந்து முகிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்.கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜினா கெஸன்ட்ரா கதாநாயகியாக நடித்துள்ளார்.
Happy that our precious #Mughizh (62min),a film close to our hearts and homes releases on 8th October in theatres.#SreejaVijaySethupathi@VijaySethuOffl @ReginaCassandra
@karthik_films @DoPsathya@revaamusic @pradeep_1123@proyuvraaj @thinkmusicindia pic.twitter.com/pEhddb1FbT— VSP_Productions (@vsp_productions) October 1, 2021
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் பாக்கெட் மணி பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் இந்த படத்திற்கு ரெவா இசையமைத்துள்ளார். சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பாலாஜி தரணிதரன் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் இந்த படத்தின் நீளம் 62 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முகிழ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் வருகிற அக்டோபர் 8-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.