விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அனிகா, குருசோம சுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது.
I hope this song will serve as a much needed pill of HOPE 😊❤️#YeRasa Premieres at 11:30am in this link ▶️https://t.co/fEfdx7qSmd#MaaManithan #Ilaiyaraaja @VijaySethuOffl @seenuramasamy@pavijaypoet
— Raja yuvan (@thisisysr) May 28, 2021
ஆனால் சில காரணங்களால் இன்னும் மாமனிதன் திரைப்படம் ரிலீஸாகாமல் இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தில் இசைஞானி இளையராஜா பாடிய தட்டிப்புட்டா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாமனிதன் படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடிய ஏ ராசா பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.