கடந்த சில நாட்களாக பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இவர்களின் குடும்பத்தையும் விமர்சித்து நடிகர் சூர்யாவிற்கு நடிக்கத் தெரியாது என்று கூறிய மீரா மிதுன், விஜயையும் விட்டுவைக்கவில்லை. சினிமாவின் மாபியா என்றெல்லாம் விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய் ரசிகர்களும் விமர்சித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் கொண்ட மீராமிதுன் தற்போது புதிதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நடிகர் விஜய் ரசிகர்களிடம் பணம் கொடுத்து என்னை விமர்சனம் செய்ய சொல்கிறார். ரவுடிசம் செய்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் களுக்கு பணம் கொடுத்து தன்னை பற்றி அவதூறு பரப்ப சொல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் விஜய் படத்தில் வரும் நடிகைகள் கவர்ச்சியுடன் நடித்தால் விமர்சிப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது விஜய் ரசிகர்களை ஆத்திரம் அடைய செய்த்ள்ளது.
https://youtu.be/7ArHBfJZ8Tg