Categories
சினிமா

நடிகர் யஷ் துப்பாக்கி சுடும் பயிற்சி…. வெளியான வீடியோ…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகரில் ஒருவராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியாகிய கே.ஜி.எப், கே.ஜி.எப். 2-ம் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனை படைத்தது. அண்மையில் வெளியாகிய கேஜிஎப்-2 படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களை பின்னுக்கு தள்ளி புது வசூல் சாதனை படைத்தது. அதன்பின் யஷின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்து வருகிறது.

அதன்பின் வரலாற்று பாணியில் உருவாகவுள்ள திரைப்படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் யஷ் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அத்துடன் அதில் “இலக்கை அடைய எப்போதும் ஒரு வழி இருக்கிறது, அதனை கண்டுபிடிப்பதே சவால்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |