ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ படம் சரியான வரவேற்பை பெறவில்லை. மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதேஷ்யாம் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
Last day, last shot and tons of amazing memories but the journey is not over yet!
See you soon darling #Prabhas#Adipurush #AboutLastNight pic.twitter.com/rtB7KahopK
— Om Raut (@omraut) November 4, 2021
தற்போது பிரபாஸ் சலார், ஆதிபுருஷ், ஸ்பிரிட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கீர்த்தி சனோன் கதாநாயகியாகவும், சையிப் அலிகான் வில்லனாகவும் நடிக்கின்றனர். இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் ஓம் ராவத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.