Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட படம்… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்…!!!

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சஹோ படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார் .

மேலும் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகவுள்ளது. இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . இதனை படக்குழு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |