பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .
பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்த இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது அந்தாதுன் படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பிரசாந்த் நடிக்கும் இந்த படத்தை அவரது தந்தையும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, மனோபாலா, சமுத்திரகனி, வனிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் அந்தகன் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டது என்றும் சில முக்கியமான காட்சிகள் ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளது .