Categories
சினிமா

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து…..! மனசு வலிக்குது…. கருத்து தெரிவித்த பிரபல இயக்குனர்…!!!!

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருவது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து. இதுகுறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ,”யாரோ முன் பின் தெரியாதவர்கள் விவாகரத்து செய்தால் கூட அது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கும்..!

அவர்களை எப்படியாவது பேசி சமாதானப்படுத்தி சேர்த்து வைக்க வேண்டும் என நானும் என் மனைவியும் முயற்சி செய்வோம். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமான பழக்கப்பட்ட நபரான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்து கொள்ளப் போவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..! என்ன பிரச்சனை இருந்தாலும் அதை கடந்து வந்தாகவேண்டும். பிரச்சினை மட்டுமே வாழ்க்கை இல்லை மற்றும் பிரச்சனை இல்லாத வாழ்க்கையும் இல்லை . நம்முடைய பிரச்சனைகளை நாம் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். பணமோ, நகையோ, பொருளோ, வாழ்க்கையோ அதனை எங்கு தொலைத்தோமோ அங்கு தான் தேடவேண்டும்.. விவாகரத்து என்பது சரியான முடிவு அல்ல நான் யாருக்கும் அட்வைஸ் செய்வதாக நினைக்க வேண்டாம் ஒரு நல்ல ரசிகனாக என் கருத்துக்களை செவிகொடுத்து கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |