தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஜவகர் மித்ரன் இயக்க, ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எல்லி அவ்ரம், யோகி பாபு உள்ளிட்டா பலர் நடித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், மற்றொரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் மற்றும் டான் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற பிரியங்கா அருள் மோகன் தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் கேப்டன் மில்லர் திரைப்படம் கௌபாய் பாணியில் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
We are glad to welcome the Gorgeous & Talented @priyankaamohan on board for #CaptainMiller ♥️🥁#PriyankaMohanInCaptainMiller @dhanushkraja @ArunMatheswaran @sundeepkishan @gvprakash @CaptainMilIer pic.twitter.com/UZ3oMTO91M
— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 19, 2022