Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’… படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?… ட்விட்டரில் தெரிவித்த இயக்குனர்…!!!

தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது . இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. மேலும் நடிகர் தனுஷ் டி 43, தி கிரே மேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் .

சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள ‘நானே வருவேன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நானே வருவேன் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |