நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள எண்ணித் துணிக படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எண்ணித் துணிக. எஸ்.ஜே.வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, அஞ்சலி நாயர், சுனில் ஷெட்டி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரைன் ஆஃப் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் ஜெய் முற்றிலும் புதுமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எண்ணித் துணிக படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ஜெய் நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.