நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் தயாராகியுள்ள ‘பூமி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜெயம் ரவியின் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பூமி’ . இது இவருடைய 25வது படமாகும் . இந்த படத்தை ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், போகன் ,ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் . இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் .
#BhoomiTeaser is all yours now 😇 Watch and Enjoy. God bless! https://t.co/s5RH81Cc2Y#BhoomiFromMay1st
An @immancomposer Musical @dirlakshman @theHMMofficial @sujataa_hmm @AgerwalNidhhi @Gdurairaj10 @actorsathish @dudlyraj @SonyMusicSouth @onlynikil @shiyamjack
— Jayam Ravi (@actor_jayamravi) March 9, 2020
விவசாயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது . சமீபத்தில் இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் இந்த படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.