ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் அசத்தி வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் மணிமாறன் இயக்கத்தில் ‘செல்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ் இடிமுழக்கம், பேச்சுலர், ஜெயில், அடங்காதே, ஐங்கரன், 4G போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பேச்சுலர் படம் வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ராதிகா சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.