சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய் பீம் படத்தில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பழங்குடியினரின் வாழ்க்கை பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யா பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி இந்த படம் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஜெய்பீம் படத்தின் சென்சார் அப்டேட் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், ரன்னிங் டைம் 164 நிமிடம் (2 மணிநேரம் 44 நிமிடம்) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சூர்யாவின் நந்தா, ரத்த சரித்திரம் ஆகிய படங்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.