Categories
இந்திய சினிமா சினிமா

“நடிகர் சுஷாந்த் சிங் மரணம்”… நடிகர் சல்மான் கான் மற்றும் இயக்குனர்களுக்கு எதிராக வழக்கு..!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகர் சல்மான்கான் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஷாந்த் ராஜ்புத்தின் வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா, பீகாரின் முஸாபார்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர்கள் சஞ்சய் லீலா பன்சாலி, கரண் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 14ம் தேதி, மும்பையில் இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இவரது உடல் மீட்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான MS Dhoni: The Untold Story- ல் இவர் தோனியாக நடித்திருந்தார். மேலும் பி.கே., கேதர்நாத், சுத் தேசி ரொமான்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இவர். இவரது தற்கொலையால் பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மன அழுத்தம் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று பலரும் கூறி வரும் நிலையில், இது தற்கொலை அல்ல கொலை என்று அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அவர் திரையுலகில் பல்வேறு சவால்களை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாலிவுட் பிரபலமான சல்மான்கான் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக சுஷாந்த் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Categories

Tech |