Categories
மாநில செய்திகள்

நடிகர் சிவாஜி பிறந்த தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.. சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் அடையாறு மேம்பாலம் அருகே உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்..

அதன் முதல்வர் ஸ்டாலின் மணிமண்டபத்தில் உள்ள நடிகர் சிவாஜியின் புகைப்படங்களையும் பார்வையிட்டார்.. அதேபோல சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்..

 

Categories

Tech |