Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் சிரஞ்சீவிக்கு கிடைத்த அந்தஸ்து…. என்னென்னு தெரியுமா?… குவியும் வாழ்த்துக்கள்….!!!!

கோவாவில் நடந்த 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு நடந்த விழாவில் ஆந்திர திரை உலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு, 2022ம் வருடத்திற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்தாக்கூர் வழங்கி கவுரவித்தார். மேலும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்றார். விருதை பெற்றுக்கொண்ட நடிகர் சிரஞ்சீவி மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு நன்றி கூறினார்.

அதன்பின் நடிகர் சிரஞ்சீவி பேசியதாவது “கொனிடேலா சிவசங்கர வரபிரசாத் என என்னைப் பெற்றெடுத்த என் பெற்றோருக்கும், சிரஞ்சீவியாக எனக்கு மறுபிறவி கொடுத்த தெலுங்குத் திரையுலகுக்கும் நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். திரைதுறைக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டுள்ளேன். அரசியலிலிருந்து திரும்பிய பின் என்னை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி” என அவர் கூறினார்.

Categories

Tech |