Categories
சினிமா

நடிகர் சிம்புவுக்கு போடப்பட்ட ரெட் கார்டு நீக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

நடிகர் சிம்புவின் கடந்த கால செயல்பாடுகள் காரணமாக 4 தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் அந்த விவகாரங்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரை சிம்புவின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றக் கூடாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொள்வதாகவும் பெப்சி அமைப்பு கூறியது.

இந்த நிலையில் நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. மேலும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு தொழிலாளர்கள் சம்மேளனம் ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று தயாரிப்பாளர்கள் பிரச்சனை முடிந்ததால் ரெட் கார்டு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |