தற்போது நடிகர் சிம்பு “பத்து தல” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவற்றில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அண்மையில் சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியாகிய “பத்து தல” திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். அதாவது, ரசிகர்களுடன் சிம்பு இருப்பது போன்றும், டிரைக்டர் ஒபிலி என்.கிருஷ்ணா சிம்புவுடன் பேசுவது போன்றும் அப்புகைப்படங்கள் அமைந்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.