Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் சித்தார்த்தின் ‘மஹா சமுத்திரம்’… விறுவிறுப்பான டிரைலர் இதோ…!!!

சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடித்துள்ள மஹா சமுத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சித்தார்த் நடிப்பில் கடைசியாக அருவம் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசா ஆந்தாலஜி வெப் தொடரில் இன்மை என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகர் சித்தார்த் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகியுள்ள மஹா சமுத்திரம் படத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் சர்வானந்த், அதிதி ராவ் ஹைதாரி, அனு இமானுவேல், ஜெகபதி பாபு, கேஜிஎஃப் பட புகழ் கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏகே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சைட்டன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மஹா சமுத்திரம் படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |