சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் புதிய டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சந்தானம் தற்போது சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக ஜீ 5 ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் அனகா, ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முனிஸ்காந்த், ஆனந்தராஜ், யோகி பாபு, நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
The new trailer of #Dikkiloona drops today at 5 PM ☺️ Oru semma comedy galatta on the way!!!
Movie releasing 10th September on @ZEE5Tamil 🎬@iamsanthanam @thisisysr @karthikyogitw @kjr_studios @SoldiersFactory @sinish_s#DikkiloonaTrailer #DikkiloonaFromSep10 #Dikkiloona pic.twitter.com/Z3qFZHduQk— KJR Studios (@kjr_studios) August 28, 2021
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர் பேக்டரி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்சன் பாணியில் டைம் மிஷினை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானம் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டிக்கிலோனா படத்தின் புதிய டிரைலர் (ஆகஸ்ட் 28) இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.