தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவர் ‘நாய் சேகர்’ என்ற திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக நடிகர் சதீஷ் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து நடிகர் சதீஷ் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘சட்டம் என் கையில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை சம்பதா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.