Categories
மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் செல்லும்…. மறு தேர்தல் தேவையில்லை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!!!

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகளும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து அரசியல் களம் சூடுபிடித்ததாக காணப்படுகிறது. இந்த தேர்தல் அரசியலை தாண்டி சினிமாவிலும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நடிகர் சங்க தேர்தல் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது நடிகர் சங்க தேர்தல் மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் தற்போது நடிகர் சங்க தேர்தல் செல்லும் எனவும் மறு தேர்தல் தேவையில்லை எனவும் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியில் நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாசர், விஷால் ,கார்த்தியின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, முகமது சபிக் தீர்ப்பு அளித்துள்ளனர். முன்பே பதிவான வாக்குகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று அறிவித்திருந்த தனி நீதிபதி கல்யாணசுந்தரத்தின் உத்தரவு ரத்தானது.

Categories

Tech |