கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது இவர் லிப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .
Lift update: we hereby confirming official. Lift movie will hit theatres with 100% occupancy.please do not believe the rumors it wil be direct OTT. Sound engineer Tapas nayak working on sound level with lot concentration as the movie demands. Perfect theatre motivation movie.
— LIBRA Productions (@LIBRAProduc) July 25, 2021
கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேரடியாக இந்த படம் ஓடிடியில் ரிலீஸாகிறது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் லிப்ட் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது . அதில் ‘100% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி கிடைத்தவுடன் இந்த படம் வெளியாகும். மேலும் ஓடிடியில் இந்த படம் ரிலீஸாக இருப்பதாக பரவும் தகவல் உண்மை இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.