நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ‘இன்னா மயிலு’ பாடல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் கவின். இவர் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கவின் நடிப்பில் இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லிப்ட்’. இந்த படத்தில் நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எக்கா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார்.
மட்டற்ற மகிழ்ச்சி to present you #InnaMylu from our #Lift ⬇️⬆️
இந்த பாடலை பாடியவர் உங்கள் எங்கள் @Siva_Kartikeyan ❤️🤗🙏🏼
Link ➡️ https://t.co/GIAeBc4edV
— Kavin (@Kavin_m_0431) April 22, 2021
இந்தப் படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது . இந்நிலையில் லிப்ட் படத்தின் ‘இன்னா மயிலு’ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை சிவகார்த்திகேயன், கமலக்கண்ணன், பூவையார், ராஜேஷ் ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.