Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த பட இயக்குனர் இவரா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ஆர்.ஜே.பாலாஜி . இதையடுத்து இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘எல்கேஜி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

RJ Balaji plans to join hands with director Ram | Tamil Movie News - Times  of India

மேலும் கடந்த வருடம் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தை பிரபல இயக்குனர் ராம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |