நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ் பிரதாப், சபீர், ஜான் கோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது . விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.