தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். சமீபத்தில் அவரது நடிப்பில் புஷ்பா படம் வெளியானது. செம்மரக்கடத்தலை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படத்தில் புஷ்பராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் அல்லு அர்ஜூன்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் வசூலில் நாள்தோறும் ஒரு சாதனை படைத்து வருகிறது. தற்போது ஓய்வில் உள்ள அல்லு அர்ஜூன் மகளுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.
நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய மகள் அல்லு அர்ஹாவுடன் சேர்ந்து எடுத்துள்ள செல்பியை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளர்.”என்னுடைய ஃபேவரைட் டைம்” என அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோ தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.