நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. இதை தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் உள்ளிட்ட பல வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்குனர் இன்னசி பாண்டியன் எழுதி இயக்கியுள்ள டைரி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடித்துள்ளார் . பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராண் எதான் யோகன் இசையமைத்துள்ளார் .
#Diary#DiaryTeaserFrom15th
@5starkathir @innasi_dir @Pavithrah_10 @AravinndSingh @RonYohann @5starcreationss @DoneChannel1 pic.twitter.com/9AF7l8LptQ— Arulnithi tamilarasu (@arulnithitamil) July 12, 2021
சமீபத்தில் டைரி படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு டைரி படத்தின் டீசர் ரிலீஸாக உள்ளது . இந்த டீசருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.