தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் யானை, சினம் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார்.
இதன் படபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் ஸ்டண்ட் காட்சி நடிக்கும் போது காயம் ஏற்பட்டதாக நடிகர் அருண் விஜய் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் திரையில் பார்க்கும் ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளுக்கு பின்னும் இப்படி பல காயங்கள் இருக்கும். ஆனால் என்னுடைய ஸ்டண்ட் காட்சிகளை நானே நடிக்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.