நடிகர் அப்பாஸின் மகள் எமிராவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் அப்பாஸ் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் விஐபி, ஜாலி, பூச்சூடவா, மலபார் போலிஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவர் நடிப்பில் இராமானுஜன் திரைப்படம் வெளியாகியிருந்தது.
மேலும் நடிகர் அப்பாஸ் கடந்த 1997-ஆம் ஆண்டு எரும் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு அய்மன் என்ற மகனும் எமிரா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நடிகர் அப்பாஸின் மகள் எமிராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பாஸுக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியமடைந்துள்ளனர்.