அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பெல்பாட்டம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெல்பாட்டம். ரஞ்சித்.எம்.திவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 1980-களில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
Bringing back the magic of the big screen with #BellBottom.#BellBottomTrailer out now – https://t.co/SdWisNFdFr @vashubhagnani @Vaaniofficial @humasqureshi @LaraDutta @ranjit_tiwari @jackkybhagnani @honeybhagnani @poojafilms
— Akshay Kumar (@akshaykumar) August 3, 2021
மேலும் வருகிற ஆகஸ்ட் 19-ம் தேதி தியேட்டர்களில் இந்த படம் ரிலீசாக இருக்கிறது. கொரோனா இரண்டாவது அலைக்கு பின் வெளியாகும் பிரம்மாண்ட படம் என்பதால் பெல்பாட்டம் படம் 3டி-யிலும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பெல்பாட்டம் படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.