அ.தி.மு.க கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வண்ணார்பேட்டை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க தொண்டர்களுக்கும் அ.தி.மு.க தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க கட்சியின் வட்ட செயலாளர் துரை தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது தி.மு.க கட்சியின் தொண்டர்கள் சிலர் அவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த துரையை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த அ.தி.மு.க தொண்டர்கள் 100 பேர் கிழக்கு கல்லறை சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ராயபுரம் மற்றும் வண்ணார்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்சி தொண்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் அ.தி.மு.க வட்ட செயலாளர் துரையை தாக்கியவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் வாக்களித்த பின்னரே போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்ட்டுள்ளது.