Categories
தேசிய செய்திகள்

நடவடிக்கை எடுக்க காலதாமதமாவது ஏன்…..? முதல்வர் ஸ்டாலின் கேள்வி…. பதறிப்போன கமிஷனர்….!!!!!!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாவலூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் மீண்டும் சென்னை திரும்பி கொண்டிருந்தார். அப்போது சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அழைப்பு மையத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.  ஈரோட்டில் இருந்து வரும் அழைப்பு மையத்தை தொடர்பு கொண்ட நபரிடம் அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். அதன் பின் புதுக்கோட்டை மாவட்டத் துணை ஆணையர் ஒருவரை தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதலமைச்சர்  அழைப்பு மையத்திற்கு வருகின்ற தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கால தாமதமாவது ஏன்? என கேட்டுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத அந்த துணை ஆணையர் அதிர்ச்சியும் பதட்டமும் அடைந்து பதில் கூற முடியாமல் தடுமாறியுள்ளார். இதனை அடுத்து இனிமேல் அழைப்பு மையத்திற்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அலுவலகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு முதலமைச்சர் அழைப்பு மையத்திற்கு வந்த புகார் மீது மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்டு நடவடிக்கைகளுக்கு மிகுந்த பாராட்டுக்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |