Categories
சினிமா தமிழ் சினிமா

“நடனம் இல்லையென்றால் நானும் இல்லை” மனம் திறந்த நடிகை சாய் பல்லவி…!

பிரபல நடிகை ஒருவர் நடனம் இல்லை என்றால் நானும் இல்லை என கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தற்போது கார்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லரை நடிகர் சூர்யா, ஆர்யா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சேர்ந்து வெளியிட்டனர்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவியிடம் கார்கி படம் குறித்து கேட்டபோது, நடிகர் சூர்யா சார் என்னுடைய படத்தை வெளியிடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், கார்கி படம் நன்றாக இருக்கிறது என்று சூர்யா சார் கூறிய பிறகு நான் நல்ல கதையை தான் தேர்ந்தெடுக்கிறேன் என்ற நம்பிக்கை வந்தது எனவும் கூறினார். அதன் பிறகு நடனம் தான் எனக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தது எனவும், நடனம் இல்லை என்றால் நானும் இல்லை எனவும் கூறினார்.

Categories

Tech |