மதுரையில் தொழிலாளி மோட்டார் சைக்கிள் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் செருப்பு தைக்கும் தொழிலாளியான ஆண்டி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திருவாலவாயநல்லூரிலிருந்து தனது கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த வாலிபர்கள் நிலைத் தடுமாறி இவரது மீது பலமாக மோதினர்.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஆண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டனர். இதற்கிடையே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.