மும்பை விலே பார்வேலியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் கல்லூரியில் நடந்த தேர்வை முடித்துவிட்டு அருகே இருக்கும் மேம்பாலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் மாணவியை பார்த்ததும் பாலியல் சைகை செய்து உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி வேகமாக அங்கிருந்து நடந்து செல்ல முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அந்த நபர் தனது பேண்ட் ஜிப்பை கழற்றிவிட்டு மாணவியை நெருங்கி சென்றுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த மாணவி அந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்தார். அதன் பிறகு உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பிறகு அங்கு வந்த போலீசார் இடம் அந்த நபரை ஒப்படைத்துள்ளார். பிறகு காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். மாணவியின் இந்த தைரியத்தைப் பார்த்து போலீசார் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.