Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற ஊழியர்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை..!!

தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொதக்கொண்டபள்ளி பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோகுல் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 200 ரூபாயை பறித்து சென்றுள்ளார்.

இதுகுறித்து கோகுல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சோமநாதபுரத்தை சேர்ந்த சூர்யா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |