மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்துவருகிறார். இதற்கு தேவகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தேவகியின் நடத்தை மீது குமார் சந்தேகப்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த 2015-ஆம் ஆண்டு மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் குமார் தனது மனைவியை தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.