அரசு பேருந்து நடத்துனரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று பரமக்குடியை நோக்கி சென்ர்ல்ளது. இந்த பேருந்தில் நடந்துனராக முத்துகுமார் என்பவர் இருந்தார். அப்போது பேருந்தில் பயணித்த ஒருவருவரும் முத்துக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த அந்த பயணி திடீரென நடத்துனர் முத்துக்குமாரை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்காமல் திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நடத்துனர் முத்துக்குமாரை தாக்கிய நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முதுகுளத்தூர் போலீசார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்தில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.