வெவ்வேறு இடங்களில் போதைபொருள் மற்றும் மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி வயல்பட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக மது விரபனியில் ஈடுபட்டிருந்த பங்களாமேடு பகுதியை சேர்ந்த ராஜகுரு என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையில் போலீசார் அல்லிநகரம் காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்த நிலையில் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் புகையிலை பொருட்களை விற்றது பெரியகுளத்தை சேர்ந்த சாகுல் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் சுமார் 5,200 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.