Categories
இராணுவம் மதுரை மாவட்ட செய்திகள்

நக்சல் படையின் கண்ணிவெடி… உயிர் துறந்த ராணுவ வீரர்…. மதுரையில் அரசு மரியாதையுடன் தகனம்…!!

நக்சல் படையின் கன்னி வெடி தாக்குதலில் உயிரிழந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது .

மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே பொய்க்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி. இவர் சத்தீஸ்கரில் உள்ள இந்தோ திபெத் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 24 ஆம் தேதி நக்சல் தடுப்பு படையினரால் ஏற்பட்ட கலவரத்தில் கண்ணி வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பொய்க்கரைபட்டிக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அவருக்கு இறுதி சடங்கு முடிந்து இறுதி ஊர்வலம் நடைபெற்று அவரின் உடல் மையவாடி சென்றடைந்ததும்  ராணுவப் படையினரால் 39 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதையடுத்து பால்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. நாட்டுக்காக உயிர் நீத்த பால்சாமியின் உயிரிழப்பால் அக்கிராமமே சோகத்தில் உள்ளது. அவரின் உடல் அடக்கம் செய்யும் வரை அங்குள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன.

Categories

Tech |