Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நகை வாங்க வந்திருக்கேன்” பெண் செய்த வேலை…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

நகைக்கடையில் திருடிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் ஒரு நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் வந்துள்ளார். இந்த பெண் நகை வாங்குவது போல நடித்து 2 கிராம் தங்க நகையை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வசிக்கும் முருகனின் மனைவியான சாமுத்தாள் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |