மாமியாரை ஏமாற்ற நகை திருடு போனதாக கணவன்-மனைவி நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் நிஷார் ,சல்மியா தம்பதிகள் . இவர்கள் நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் இருந்த 30 சவரன் நகை திருட்டு போனதாக போலீஸாரிடம் புகார்அளித்தனர் . இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது வீட்டுக்குள் வெளிஆட்கள் யாரும் செல்ல வில்லை என்பது தெரியவந்தது.
இதனால் வீட்டுக்குள் இருக்கும் யாராவது ஒருவர் தான் நகையை எடுத்திருக்க வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர் . இதற்கு பயந்த நிஷார் மற்றும் சால்மியா இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று திருட்டு போன நகை சமயலறையில் இருந்தது என்றுகூறியுள்ளனர் .
இதில் சந்தேகமடைந்த போலீசார் விசாரணை நடத்தியபோது மாமியார் நகையை கேட்டதால் நகை திருடு போனதாக கணவன் மனைவி இருவரும் நாடகமாடிய சம்பவம் வெளியானது. இதையடுத்து போலீசார் இருவரையும் கண்டித்து அனுப்பி வைத்தனர்.