Categories
மாநில செய்திகள்

நகைக் கடன் மோசடி… அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்…!!!!!

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மோசடிகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது.

மார்ச் 31-ஆம் தேதிக்குள் தகுதியுடைய நபர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் ஒப்படைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. திமுக தேர்தல் அறிக்கையில் நகை கடன் தள்ளுபடி வாக்குறுதி இடம்பெற்ற நிலையில் பலர் அதை குறிவைத்து முறைகேடுகள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் முறைகேடுகளை கண்டறியும்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுபற்றி மக்கள் செய்தி தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேனி மாவட்டம் சின்னமனூர் வட்டாரத்தில் வரை செயல்பட்டு வரும் எம்பி 80 கோபால் நாயக்கர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொது நகை கடன் தள்ளுபடி பெறாதவர்களின் புகார் அடிப்படையில் சங்கத்தை துறை அலுவலர்கள் ஆய்வு செய்தபோது 52 நகை கடை நகைக் கடன் தொகை ரூ.30,64,200/- கொரியன் நகைகளை எடுத்துச் சென்று தனியார் நிறுவனத்தில் மறு அடகு வைத்துள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது.

மேற்படி குற்ற செயலை செய்த முருகராஜ் சங்க செயலாளர் 18.03.2022 தற்காலிக பணி நீக்கம் செய்யப்படும் குற்றவியல் நடவடிக்கை தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவில் 24.03.2022 குற்ற  புகார் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தனியார் நிதி நிறுவனங்களில் மறு அடகு வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுடைய நகைகள் திருப்பி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் தூத்துக்குடி மண்டலம் கோவில்பட்டி சரகத் துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள ஓ.286 வில்லிசேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் சொந்த நிதி ஆதாரம் இல்லாமல் பிப்ரவரி 2021 மற்றும் மார்ச் 2021 மாதங்களில் 489 நபர்களுக்கு ரூ.3.79 கோடி அளவிற்குக் கடன் வழங்காமலேயே, நகையை மட்டும் பெற்று அடகு வைத்து கடன் வழங்கியதாக ஆவணங்கள் தயார் செய்து முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இந்த நகைகள் அனைத்தும் தள்ளுபடி பெறும் நோக்கத்திற்காக ஜனவரி மற்றும் பிப்ரவரி 2021 மாதங்களில் அடமானம் வைக்கப்பட்டவை ஆகும்.

இந்நிலையில் இதற்க்கு  காரணமான மாரியப்பன் சங்க செயலாளர்24.03.2022 தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சங்கத்தின் தலைவர்24.03.2022 முதல் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு முறைகேட்டிற்கு காரணமான சங்க செயலாளர் மற்றும் இதர நபர்கள் மீது குற்ற புகார் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முறைகேடுகள் நடைபெற்று மேற்கண்ட இரண்டு சங்கங்களிலும் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81ன்  கீழ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |