தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றபோது சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து வங்கி உயரதிகாரிகள் அனைத்து கூட்டுறவு அடமான நகைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில் யார் யாருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. நகை கடையை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் தள்ளுபடி கிடையாது.
அதனைதொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூட்டுறவு வங்கி நகை கடன் வைத்திருந்தால் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது. மேலும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும்வர்கள், ஆதார் எண்ணை தவறாக வழங்கியவர்கள், குடும்ப அட்டை வழங்கதாவர்கள் மற்றும் வெள்ளை அட்டை வைத்திருப்பவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கப்படாது. இதன்படி வங்கிகள் பெறப்பட்ட 48 லட்சம் நகை கடனில் 35 லட்சம் பேருக்கு நகை கடன தள்ளுபடி கிடையாது என்று கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது தயாராகியுள்ள பட்டியலின் படி 13,47,033 பெருக்கு நகை கடன் பெற தகுதியானவர்கள். இவர்களின் விவரங்கள் மாவட்ட வாரியான பட்டியல் அந்தந்த மண்டல இணைப்பதிவாளர் களுக்கு எக்ஸெல் படிவத்தில் ஈமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நகை கடன் தள்ளுபடி பெற தகுதி பெறுபவர்களுக்கு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து இறுதி ஒப்புதல் வந்த பிறகு நகை கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் தகுதி பெற்ற அரசு விதிமுறைகளுக்கு வராத 35,37,500 பேருக்கு கடன் தள்ளுபடி கிடையாது என்பது உறுதியானது.