விடுதி மேலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பலாவநத்தம் பகுதியில் தர்மராஜ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் 15 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்க்க வந்துள்ளார். நேற்று காலை விடுதியில் இருக்கும் அறையில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் தர்மராஜ் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக போலீஸ்சாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது தர்மராஜ் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் என 6 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது. இதனை அடுத்து அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு தர்மராஜ் விடுதியை காலி செய்த வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்கியுள்ளார். எனவே 3 மணிக்கு மேல் தான் அவரை யாரோ கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகப்பட்டனர். இதனை அடுத்து விடுதியை காலி செய்த ராஜஸ்தானை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் மீது போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரது செல்போன் என்னை தொடர்பு கொண்டு பேசிய போது தான் விருதுநகர் பகுதியில் இருப்பதாக கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதனால் போலீசார் நேற்று கோபாலகிருஷ்ணனை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த தர்மராஜின் தங்க நகைகளை மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நகைக்காக விடுதி மேலாளர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.