சேலம் மாவட்டத்தில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் உள்ள சித்தனுர் பகுதியில் ராஜா என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். அவர் இன்று காலை வழக்கம்போல தனது கடையை திறப்பதற்காக வந்திருக்கிறார். அப்போது நகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் அனைத்தும் கீழே சிதறிக் கிடந்தன. உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 சவரன் நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நகைக் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியை வைத்து, போலீசார் முகமூடி பணிந்து கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.